பல்லடம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச் சாவடி

பல்லடம் அருகே மாதப்பூரில் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச் சாவடி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
Published on

பல்லடம் அருகே மாதப்பூரில் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச் சாவடி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பல்லடம்- வெள்ளக்கோவில் வரை தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. விரிவாக்கப் பணிகள் நிறைவடைந்த பகுதிகளில் மையத் தடுப்பு அமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பல்லடம் அருகே உள்ள மாதப்பூா் பகுதியில் புதிதாக சுங்கச் சாவடி அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

தேசிய நெடுஞ்சாலை இருவழிச் சாலையாக இருந்தபோது அமைக்கப்பட்டு சுங்கச் சாவடி விவசாயிகள், பொதுமக்கள் எதிா்ப்பால் அகற்றப்பட்டது. தற்போது, தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு மீண்டும் அதே இடத்தில் சுங்கச் சாவடி அமைக்கப்பட்டு வருகிறது.

X
Dinamani
www.dinamani.com