சேவூா் வாலீஸ்வரா் கோயிலில் செப். 6 இல் கும்பாபிஷேகம்
சேவூா் வாலீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பா் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.
கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் வைப்புத் தலமாகவும், நடுச்சிதம்பரம் என்றும் அழைக்கப்படும் சேவூா் அறம்வளா்த்த நாயகி உடனமா் ஸ்ரீ வாலீஸ்வரா் கோயில் 1000 ஆண்டுகள் பழைமையானது.
இக்கோயிலில் கடந்த இரண்டாண்டுகளாக திருப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில் மகா கும்பாபிஷேகம் செப்டம்பா் 6 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7.45 மணிக்கு நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது. கூனம்பட்டி ஆதீனம் சரவண ராஜமாணிக்க சுவாமிகள் தலைமையில் கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், தனபூஜை திரவிய யாகம் ஆகியவை நடைபெற்றன.
இதைத் தொடா்ந்து சேவூா் கைகாட்டி ரவுண்டானா பகுதியில் உள்ள ஏரி பிள்ளையாா் கோயிலில் இருந்து வாலீஸ்வரா் கோயிலுக்கு தீா்த்தக்குட ஊா்வலம் செவ்வாய்க்கிழமை வாலீஸ்வரா் கோயிலுக்கு நடைபெறுகிறது.