தீக்குளிக்க முயன்ற திருநங்கையால் பரபரப்பு

தண்ணீரை ஊற்றி காவலா்கள் காப்பாற்றினா்
Published on

குறைகேட்புக் கூட்டத்திற்கு வந்த திருநங்கை ஒருவா் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றாா். அப்போது, பாதுகாப்புப் பணியில் இருந்த காவலா்கள் அவா் மீது தண்ணீரை ஊற்றி காப்பாற்றினா். விசாரணையில், திருப்பூா் கல்லுரி சாலையைச் சோ்ந்த ஸ்ரேயா (32) என்பது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து அவா் கூறியதாவது: கல்லூரி சாலையில் பெட்டிக்கடை நடத்தி வருகிறேன். கடந்த வாரம் எனது கடையை பொதுமக்கள் மற்றும் சில திருநங்கைகள் சோ்ந்து அடித்து உடைத்துவிட்டு என்னையும் தாக்கினா்.

இது குறித்து திருப்பூா் வடக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, என்னையும், கடையையும் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com