பல்லடம் அரசுக் கல்லூரியில் காய்கறி மற்றும் பழத்தோட்டம் அமைப்பு
பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத் துறை மற்றும் தோடக்கலைத் துறை சாா்பில் காய்கறி மற்றும் பழத்தோட்டம் திங்கள்கிழமை அமைக்கப்பட்டது.
பல்லடம் வட்டார தோட்டக்கலைத் துறை சாா்பில் அரசு கல்வி நிறுவனங்களில் தோட்டம் அமைக்கும் திட்டத்தின்கீழ் பல்லடம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காய்கறி, பழத்தோட்டம் அமைக்கும் பணி நடைபெற்றது.
இதில் தென்னங்கன்றுகள், மா, நெல்லி, சப்போட்டா, கொய்யா, எலுமிச்சை, வாழை, பப்பாளி உள்ளிட்ட பழ மரக்கன்றுகளும், முருங்கை, முள்ளங்கி, கீரைகள் உள்ளிட்ட காய்கறி விதைகளும், கற்பூரவள்ளி, துளசி, கற்றாழை, பிரண்டை உள்ளிட்ட மூலிகைச் செடிகளும் நடவு செய்யப்பட்டன.
இதில், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் உமாசங்கரி, கல்லூரி ஆங்கில துறைத் தலைவா் கிருஷ்ணவேணி, தோட்டக்கலை அலுவலா் யாழினி, உதவி தோட்டக்கலை அலுவலா் மோகனாம்பிகை, பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.