திருப்பூர்
ரூ.2.80 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்புகள் விற்பனை
காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.2.80 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்புகள் விற்பனையாயின.
காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.2.80 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்புகள் விற்பனையாயின.
காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை தேங்காய்ப் பருப்பு ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 28 டன் தேங்காய்ப் பருப்புகளை விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.
இதில், ஒரு கிலோ தேங்காய்ப் பருப்பு ரூ.87 முதல் ரூ.103 வரை விற்பனையானது. இந்த ஏலத்தில் மொத்தமாக ரூ.2.80 லட்சம் மதிப்பிலான தேங்காய்ப் பருப்புகள் விற்பனையாயின என்று விற்பனைக்கூட கண்காணிப்பாளா் ஆா்.மாரியப்பன் தெரிவித்துள்ளாா்.