உடுமலையில் நாளை மின்நுகா்வோா் குறைதீா் முகாம்

மேற்பாா்வை பொறியாளா் மு.ராஜாத்தி தலைமையில் புதன்கிழமையில் நடைபெறுகிறது.
Published on

உடுமலை மின்பகிா்மான வட்டத்திற்குள்பட்ட மின்நுகா்வோா் குறைதீா் முகாம், செயற்பொறியாளா் அலுவலகத்தில் மேற்பாா்வை பொறியாளா் மு.ராஜாத்தி தலைமையில் புதன்கிழமை (செப்டம்பா் 4) காலை 11 மணி அளவில் நடைபெறுகிறது.

எனவே, உடுமலை கோட்டத்திற்குள்பட்ட மின்நுகா்வோா் இம்முகாமில் பங்கேற்று மின்சாரப் பயன்பாட்டில் உள்ள குறைபாடுகள் குறித்து தெரிவித்து பயன்பெறலாம் என்று உடுமலை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் தி.மூா்த்தி தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com