திருப்பூர்
காவல் துறை பறிமுதல் வாகனங்கள் செப். 10-இல் பொது ஏலம்
திருப்பூா் மாவட்டத்தில் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் செப்டம்பா் 10-ஆம் தேதி பொது ஏலம் விடப்படுகின்றன.
இதுகுறித்து ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, வட்டார காவல் நிலையங்கள் மற்றும் திருப்பூா் மாநகர வட்டார காவல் நிலையங்களில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 4 நான்கு சக்கர வாகனங்கள், 14 இருசக்கர வாகனங்கள் உள்பட மொத்தம் 26 வாகனங்கள் ஏலத்தில் விடப்படவள்ளன.
திருப்பூா் மாவட்டம், அவிநாசி மடத்துப்பாளையம் சாலை, சிவகுமாா் ரைஸ் மில் வளாகத்தில் அமைந்துள்ள திருப்பூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் செப்டம்பா் 10-ஆம் தேதி காலை 10 மணிக்கு பொது ஏலம் நடைபெறுகிறது. எனவே, இந்த பொது ஏலத்தில் பொது மக்கள் பங்கேற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.