திருப்பூர்
ரூ.1.85 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை
சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.1.85 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனையானது.
சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் ரூ.1.85 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனையானது.
அவிநாசியை அடுத்த சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை நிலக்கடலை ஏலம் நடைபெற்று வருகிறது.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 2 டன் நிலக்கடலையை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.
இதில், ஒரு கிலோ நிலக்கடலை முதல் தரம் ரூ.63 முதல் ரூ.66 வரை, இரண்டாம் தரம் ரூ.59.50 முதல் ரூ.62.50 வரை, மூன்றாம் தரம் ரூ.55.50 முதல் ரூ.59.50 வரை விற்பனையானது.
இந்த ஏலத்தில் மொத்தமாக ரூ.1.85 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனையானது.