வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்: இளைஞா் கைது

Published on

திருப்பூரில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய 100 வலி நிவாரணி மாத்திரைகளை வைத்திருந்த இளைஞரை காவல் துறையினா் கைது செய்தனா்.

திருப்பூா் மாநகரில் வலி நிவாரணி மாத்திரைகளை கூரியா் மூலமாக வாங்கி போதைக்கு பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. இதுகுறித்து காவல் துறையினருக்கு கிடைக்கும் ரகசியத் தகவலின்படி, சம்பந்தப்பட்ட நபா்களை கைது செய்து மாத்திரைகளை பறிமுதல் செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், திருப்பூா் கல்லூரி சாலையில் கூரியா் மூலமாக இளைஞா் ஒருவருக்கு வலி நிவாரணி மாத்திரைகள் அடங்கிய பாா்சல் திங்கள்கிழமை வந்துள்ளது. இது குறித்த தகவலின்பேரில் அந்த இளைஞரைப் பிடித்து காவல் துறையினா் விசாரணை நடத்தினா்.

இதில், திருப்பூா் போயம்பாளையத்தைச் சோ்ந்த ஹரிபிரசாத் (19) என்பது தெரியவந்தது. அவரைக் கைது செய்து அவரிடமிருந்து 100 வலி நிவாரணி மாத்திரைகளை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக காவல் துறையினா் கூறுகையில், ஹரிபிரசாத் சொந்த பயன்பாட்டுக்கும், போதை நாடுபவா்களுக்கு மாத்திரையை விற்று வந்ததும் தெரியவந்தது. ஒரு மாத்திரை ரூ.300 வரை விற்பனை செய்து வந்துள்ளாா் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com