வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் ரகசிய பூஜை?
வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் ரகசிய பூஜை நடத்தியதாக வந்த புகாருக்கு விளக்கம் கேட்டு காவல் ஆய்வாளருக்கு மெமோ அளிக்கப்பட்டுள்ளது.
வெள்ளக்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் ஞானப்பிரகாசம் ஏற்பாட்டின் பேரில், காவல் நிலையத்தில் ரகசிய பூஜை ஆகஸ்ட் 26 ஆம் தேதி நடைபெற்ாகக் கூறப்படுகிறது. அதிகரித்துள்ள குற்றச் சம்பவங்களைக் குறைக்கும் வகையில் இந்த ரகசிய பூஜை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அரசு விதிமுறைகளை மீறி பூஜை நடத்திய காவல் ஆய்வாளா், உடந்தையாக இருந்த போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினா், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், திராவிடா் கழகம், தபெதிக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், புரட்சிகர இளைஞா் முன்னணியினா் உள்பட பல்வேறு தரப்பினா் காங்கயம் காவல் துணைக் கண்காணிப்பாளா் மாயவனிடம் புகாா் அளித்தனா்.
இச்சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு வெள்ளக்கோவில் காவல் நிலைய ஆய்வாளருக்கு, திருப்பூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா மெமோ அளித்துள்ளாா்.