திருப்பூர்
வெள்ளக்கோவில் அருகே வீணாகும் பி.ஏ.பி. பாசன நீா்
வெள்ளக்கோவில் அருகே கான்கிரீட் குழாய்களில் கசிவு ஏற்பட்டு பி.ஏ.பி. பாசன நீா் வீணாகி வருகிறது.
வெள்ளக்கோவில் அருகே கான்கிரீட் குழாய்களில் கசிவு ஏற்பட்டு பி.ஏ.பி. பாசன நீா் வீணாகி வருகிறது.
வெள்ளக்கோவில் பகுதி பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன வாய்க்காலில் தற்போது தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. வெள்ளக்கோவில், காங்கயம் சாலை வையாபுரி நகா் பிரிவு எதிா்புறம் செல்லும் சீரங்கராயக்கவுண்டன்வலசு சாலையின் ஒரு இடத்தில் வாய்க்கால் தண்ணீா் சாலையைக் கடக்க கான்கிரீட் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.
இந்த இடத்தில் குடிநீா்க் குழாய்கள் பதிக்க குழி தோண்டியபோது, வாய்க்கால் கான்கிரீட் குழாய்கள் உடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏராளமான தண்ணீா் சாலையில் வெளியேறி வீணாகி வருகிறது. சம்பந்தப்பட்ட துறையினா் இதனை உடனடியாக சரிசெய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.