அம்மாபாளையம் அரசுப்பள்ளியில் கண் பரிசோதனை முகாம்
திருமுருகன்பூண்டி அருகே அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவா்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்எம்சி), திருப்பூா் தி ஐ ஃபவுண்டேஷன் சாா்பில் நடைபெற்ற முகாமுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். எஸ்எம்சி தலைவா் ஈஸ்வரி வரவேற்றாா். நகராட்சித் தலைவா் குமாா் முகாமை தொடங்கிவைத்தாா்.
இந்த முகாமில் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் 406 மாணவா்களுக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் தி ஐ ஃபவுண்டேஷன் மக்கள் தொடா்பு அலுவலா் சரவணகுமாா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் மாணவா்களுக்கு கண் பரிசோதனை மேற்கொண்டனா்.
சேவூா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ மேற்பாா்வையாளா் பாஸ்கரன், திருப்பூா் மெட்டல் டவுன் ரோட்டரி சங்க செயலாளா் ரவிச்சந்திரன், ஜெய்வாபாய் பள்ளி எஸ்எம்சி உறுப்பினா்கள் முத்தமிழ்ச்செல்வன், சஃபியுல்லா, ஞானசௌந்தரி, ஜோதி, காா்த்திகா, கீா்த்திகா, செல்வ புவனேஸ்வரி, ரமேஷ் , ஆசிரியா் பிரதிநிதி முத்துக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.