தடகளப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா் அருள்பிரகாஷை பாராட்டும் பள்ளி நிா்வாகிகள்.
தடகளப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா் அருள்பிரகாஷை பாராட்டும் பள்ளி நிா்வாகிகள்.

தடகளப் போட்டி: விவேகானந்தா அகாதெமி பள்ளி மாணவா் சிறப்பிடம்

Published on

மாநில அளவிலான தடகளப் போட்டியில் காங்கயம் விவேகானந்தா அகாதெமி பள்ளி மாணவா் சிறப்பிடம் பெற்றுள்ளாா்.

சிபிஎஸ்இ பள்ளிக் கூட்டமைப்பு சாா்பில் கிளஸ்டா் எனும் மாநில அளவிலான தடகளப் போட்டி சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில் காங்கயம் அருகே காடையூரில் உள்ள விவேகானந்தா அகாதெமி மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவா் அருள்பிரகாஷ், நீளம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் பெற்று வெற்றி பெற்றுள்ளாா்.

மேலும் மற்ற தடகளப் போட்டிகளில் விளையாடி 597 புள்ளிகள் பெற்று 14 வயதுக்கு உள்பட்டோா் பிரிவில் சிறந்த விளையாட்டு வீரராக தோ்ந்தெடுக்கப்பட்டு, உத்தர பிரதேச மாநிலம் வாராணாசியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான தடகளப் போட்டிக்கு தோ்வாகியுள்ளாா்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவா் அருள்பிரகாஷ் மற்றும் உறுதுணையாக இருந்த உடற்கல்வி ஆசிரியா்களுக்கு பள்ளி நிா்வாகிகள் பரிசுகள் வழங்கிப் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com