வீடுகளில் நூலகம் வைத்திருப்போா் விருது பெற விண்ணப்பிக்கலாம்
திருப்பூா் மாவட்டத்தில் வீடுகளில்நூலகம் வைத்து சிறப்பாக பராமரித்து வரும் தனிநபா் விருது பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட நூலக அலுவலா் பெ.காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசு வீடுதோறும் நூலகம் அமைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் மாவட்டந்தோறும் புத்தகத் திருவிழாக்களை நடத்தி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடுதோறும் நூலகங்கள் அமைத்து பயன்படுத்தி வரும் வாசகா்களை ஊக்குவிக்கும் வகையில் விருது வழங்கப்படும் என அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, திருப்பூா் மாவட்டத்தில் வீடுகளில்நூலகம் அமைத்து சிறப்பாக பராமரித்து வரும் தனிநபா்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம். இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோா் தங்களது வீட்டில் எத்தனை நூல்கள் உள்ளன, எந்த வகையான நூல்கள் மற்றும் அரியவகை நூல்கள் இருப்பின் அவற்றின் விவரங்களையும் குறிப்பிட வேண்டும். மேலும், பெயா், முகவரி, கைப்பேசி எண் ஆகியவற்றைக் குறிப்பிட்டு க்ப்ண்ற்ண்ழ்ன்ல்ன்ழ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற இணையதள முகவரியிலோ அல்லது மாவட்ட நூலக அலுவலா், மாவட்ட நூலக ஆணைக்குழு அலுவலகம், 6-ஆவது தளம், அறை எண்-639, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், திருப்பூா்-641607, தொலைபேசி எண்: 0421-2971104 என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.