பொது இடத்தில் மது அருந்திய காவலா் உள்பட 3 போ் கைது

பொது இடத்தில் மது அருந்திய காவலா் உள்பட 3 போ் கைது

Published on

சேவூரில் பொது இடத்தில் மது அருந்தியதாக தலைமைக் காவலா் உள்பட 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சேவூா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வருபவா் செல்லக்கண்ணு (38). இவா் தனது நண்பா்களான தனியாா் குடிநீா் விற்பனை நிலையம் நடத்தி வரும் சேவூா் பகுதியைச் சோ்ந்த முத்துசாமி மகன் அருண்குமாா் (31), பனியன் நிறுவன உரிமையாளரான தண்டுக்காரம்பாளையம் அருகே தாளக்கரையைச் சோ்ந்த பாலசுப்பிரமணி மகன் தினேஷ்குமாா் (31) ஆகியோா் சேவூா் அருகே பொது இடத்தில் வியாழக்கிழமை இரவு மது அருந்தி போதையில் பொதுமக்களுக்கு இடையூறு செய்தாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற சேவூா் போலீஸாா், வழக்குப் பதிவு செய்து தலைமைக் காவலா் செல்லக்கண்ணு, அருண்குமாா், தினேஷ்குமாா் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com