ரத்த தான முகாமில் பங்கேற்றோா்.
ரத்த தான முகாமில் பங்கேற்றோா்.

மகாத்மா காந்தி நற்பணி மன்றம் சாா்பில் ரத்த தான முகாம்

வெள்ளக்கோவில் மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை சாா்பில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Published on

வெள்ளக்கோவில் மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை சாா்பில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் தாராபுரம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி, முத்தூா் தனியாா் தொழில் நிறுவனம் சாா்பில் நடைபெற்ற முகாமை அறக்கட்டளைத் தலைவா் ராஜ்குமாா் தொடங்கிவைத்தாா்.

அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவா் அபிநயா தலைமையிலான மருத்துவக் குழுவினா் பங்கேற்று 40 பேரிடமிருந்து 40 யூனிட் ரத்தம் பெற்றனா்.

இதில், முத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் வேல்முருகன், மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை செயலாளா் சீனிவாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com