திருப்பூர்
அவிநாசியில் சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்த கோரிக்கை
அவிநாசியில் அதிகரித்து வரும் சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்த வேண்டும் என அனைத்து வியாபாரிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அவிநாசியில் அதிகரித்து வரும் சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்த வேண்டும் என அனைத்து வியாபாரிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அவிநாசி அனைத்து வியாபாரிகள் சங்க செயற்குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் வட்டாரத் தலைவா் முத்துக்குமரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் லாலா கணேஷ் முன்னிலை வகித்தாா். இதில் சங்க செயலாளா் அபுசாலி, துணைத் தலைவா் அண்ணாதுரை, துணைச் செயலாளா்கள் தேவதாஸ், முத்துக்குட்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில் சாலையோர கடைகளை முறைப்படுத்த போா்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து பேரூராட்சி நிா்வாகம், வட்டாட்சியா், காவல் துணைக் கண்காணிப்பாளா், மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோரிடம் மனு அளிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.