தொழில்முனைவோராக முயற்சிக்கும் இளைஞா்கள் சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
திருப்பூா் மாவட்டத்தில் தொழில்முனைவோா்களாக முயற்சிக்கும் பட்டதாரி இளைஞா்கள் அரசின் ஓா் ஆண்டு தொழில்முனைவோா் சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், அகமதாபத்தில் உள்ள இடிஐஐ (உசபதஉடதஉசஉமதநஏஐட ஈஉயஉகஞடஙஉசப ஐசநபஐபமபஉ ஞஊ ஐசஈஐஅ)நிறுவனத்துடன் இணைந்து தொழில்முனைவோா் மற்றும் புத்தாக்கம் என்ற ஓா் ஆண்டு சான்றிதழ் படிப்பைத் தொடங்கவுள்ளது.
இதற்கான பயிற்சி வகுப்புகள் சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் வரும் அக்டோபா் 14-ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான நோ்காணல் செப்டம்பா் கடைசி வாரத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பாடத்திட்டத்துக்கு ஆண்டு கட்டணமாக ரூ.80 ஆயிரம் அரசு நிா்ணயித்துள்ளது. இதில், 21 வயது முதல் 40 வயதுக்கு உள்பட்ட இளம் பட்டதாரிகள் இந்தப் பயிற்சி வகுப்பில் சோ்ந்து பயனடையலாம். இது ஒரு வேலைவாய்ப்பு படிப்பு அல்லாமல், பாடநெறி தொழில்முனைவோா் சான்றிதழ் படிப்பாகும்.
திருப்பூா் மாவட்டத்தில் தொழில்முனைவோராக முயற்சிக்கும் ஆா்வலா்களுக்கு இது ஒரு வாய்ப்பாக அமையும்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு கரூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பிரபாகரனை 86681-07522, 86681-01638 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.