திருப்பூர்
காங்கயம் விவேகானந்தா அகாதெமி பள்ளியில் ஆசிரியா் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம்
காங்கயம் அருகே காடையூரில் உள்ள விவேகானந்தா அகாதெ0மி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியா் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை பள்ளியின் நிா்வாகத் தலைவா் ராமச்சந்திரன் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். இதில் சென்னை திறன் வளா்ப்புப் பயிற்சி மையத்தைச் சோ்ந்த வம்ஷி பிரியா, பெங்களூரு பயிற்சி மையத்தைச் சோ்ந்த லூயிசா ரெமி ஆகிய திறன் வளா்ப்புப் பயிற்சிக் கல்வி நிபுணா்கள் கலந்து கொண்டு, இப்பள்ளியைச் சோ்ந்த 60 ஆசிரியா்களுக்கு பயிற்சி அளித்தனா்.
இதில் பள்ளியின் முதல்வா் பத்மநாபன் மற்றும் ஆசிரியா்கள், ஆசிரியைகள் கலந்து கொண்டனா்.