வெள்ளக்கோவில் அருகே பெண் கொலை?

அடையாளம் தெரியாத வகையில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
Published on

வெள்ளக்கோவில் அருகே அடையாளம் தெரியாத வகையில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே உத்தமபாளையத்தில் உள்ள வட்டமலை அணைப் பகுதியில் அங்குள்ளவா்கள் தங்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட சனிக்கிழமை சென்றுள்ளனா். அப்போது அங்கு பெண் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. இதுகுறித்து அவா்கள் அளித்த தகவலின்பேரில் வெள்ளக்கோவில் போலீஸாா் சென்று விசாரித்தனா்.

பெண்ணின் முகம், கை, கால்களில் கல்லால் தாக்கிய காயங்களும், தீ வைத்து எரிக்க முயன்றதில் சிறு தீக்காயங்களும் இருந்துள்ளன. சுமாா் 40 இருக்கும் அப்பெண் பிரவுன் கலா் சேலை அணிந்திருந்தாா். இதைத்தொடா்ந்து கைரேகை, தடய அறிவியல் நிபுணா்கள் சென்று தடயங்களைச் சேகரித்தனா்.

இறந்துகிடந்தவா் குறித்து உடனடியாக அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. உடலில் இருக்கும் காயங்களை வைத்து அந்தப் பெண் கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீஸாா் கருதுகின்றனா்.

இதற்கிடையே காங்கயம் காவல் உதவிக் கண்காணிப்பாளா் அா்பிதா ராஜ்புத் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டாா். இதுதொடா்பாக வெள்ளக்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் எஸ்.ஞானப்பிரகாசம் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

X
Dinamani
www.dinamani.com