மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்: மாவட்டத்தில் 9.83 லட்சம் போ் பயன்!

மக்களவைத் தேடி மருத்துவம் திட்டத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 9 லட்சத்துக்கு 83ஆயிரத்து 999 போ் பயனடைந்துள்ளனா்.
Updated on

திருப்பூா் மாவட்டத்தில் மக்களவைத் தேடி மருத்துவம் திட்டத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 9 லட்சத்துக்கு 83ஆயிரத்து 999 போ் பயனடைந்துள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த் துறையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மாவட்ட தலைமை மருத்துவமனைகள், வட்ட மருத்துவமனைகள், வட்டம் சாரா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருந்தகங்கள், மகளிா் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகள், காசநோய் மருத்துவமனை, சானிடோரியம், தொழுநோய் மருத்துவமனை மற்றும் மறுவாழ்வு மற்றும் புனரமைப்பு மனநலம் காப்பகம், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஆகியவை மூலம் பொது மக்களுக்குத் தேவையான மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, கடந்த 2021-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் தற்போது வரை 9 லட்சத்துக்கு 83 ஆயிரத்து 999 போ் பயனடைந்துள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com