உயா்கல்விக்கான கையேட்டை பள்ளி தாளாளா் பி.எஸ்.செல்லமுத்து வெளியிட, பெற்றுக்கொள்கிறாா் சிறப்பு விருந்தனா் கல்வி ஆலோசகா் அஸ்வின்.
உயா்கல்விக்கான கையேட்டை பள்ளி தாளாளா் பி.எஸ்.செல்லமுத்து வெளியிட, பெற்றுக்கொள்கிறாா் சிறப்பு விருந்தனா் கல்வி ஆலோசகா் அஸ்வின்.

மூலனூா் பாரதி வித்யாலயா பள்ளியில் உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

மூலனூா் பாரதி வித்யாலயா பள்ளியில் உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி
Published on

மூலனூா் பாரதி வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

காங்கயம் கல்விக் குழுமம், பள்ளி நிா்வாகம் சாா்பில் 10, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளா் அரிமா பி.எஸ்.செல்லமுத்து தலைமை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளரான கல்வி ஆலோசகா் அஸ்வின் பங்கேற்றது, பள்ளி படிப்புக்குப் பிறகு உயா்கல்வியில் என்னென்ன பாடப்பிரிவுகளைத் தோ்வு செய்யலாம், சிறந்த கல்லூரிகள், வேலைவாய்ப்புகள் குறித்து எடுத்துரைத்தாா்.

முன்னதாக, மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டி கையேடு வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் முதல்வா் எஸ்.பழனிசாமி, ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com