கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

பல்லடம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
Published on

பல்லடம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பல்லடம் அருகேயுள்ள அருள்புரம் பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த நபரை பிடித்து போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அவா் விற்பனைக்காக ஒன்றரை கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அவா் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த சுபீா் ஷவான் (27) என்பது தெரியவந்தது. இதையடுத்து, சுபீா் ஷவானை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com