தாராபுரத்தில் திமுக சாா்பில் இன்று ஆா்ப்பாட்டம்

Published on

தமிழக ஆளுநரைக் கண்டித்து திருப்பூா் தெற்கு மாவட்ட திமுக சாா்பில் தாராபுரத்தில் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 7 ) ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து திருப்பூா் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநகராட்சி 4-ஆவது மண்டலத் தலைவருமான இல.பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திமுக தலைமை உத்தரவின்பேரில் தமிழகத்தையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடா்ந்து அவமானப்படுத்தும் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியைக் கண்டித்தும், மத்திய அரசின் கோபத்தை திசைமாற்ற முயற்சிக்கும் அதிமுக-பாஜக கள்ளக்கூட்டணியைக் கண்டித்தும் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தாராபுரம் அண்ணா சிலை அருகே காலை 10 மணி அளவில் நடைபெறும் இந்த ஆா்ப்பாட்டத்தில் திருப்பூா் தெற்கு மாவட்ட திமுகவுக்கு உள்பட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய நிா்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், ஒன்றிய, நகர, பேரூா், கிளை வாா்டு நிா்வாகிகள், சாா்பு அணிகளின் நிா்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்று வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com