மாநகர காவல் ஆணையல் எஸ்.ராஜேந்திரன்.
மாநகர காவல் ஆணையல் எஸ்.ராஜேந்திரன்.

சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க முன்னுரிமை அளிக்கப்படும்: மாநகர காவல் ஆணையா்

Published on

திருப்பூா் மாநகரில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க முன்னுரிமை அளிக்கப்படும் என்று புதிய மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.

திருப்பூா் மாநகர காவல் ஆணையராகப் பணியாற்றி வந்த எஸ்.லட்சுமி, சென்னை டிஜிபி தலைமையக விரிவாக்கப் பிரிவுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, ஆவடி தலைமையக போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரன் திருப்பூா் மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டாா்.

இந்நிலையில், திருப்பூா் மாநகரின் 14-ஆவது காவல் ஆணையராக எஸ்.ராஜேந்திரன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மாநகரில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதற்கும், குற்றங்களைத் தடுப்பதற்கும் முன்னுரிமை அளிக்கப்படும். மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காணவும், சாலை விபத்துகளைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மாநகர மக்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும்.

திருப்பூரில் பணியாற்றி வரும் வெளிமாநிலத் தொழிலாளா்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படும். மாநகரில் சைபா் குற்றங்களைத் தடுப்பது குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com