திருப்பூர்
சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு
பெருமாநல்லூா் அருகே சாலை விபத்தில் பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
கேரள மாநிலம், ஆலுவா பகுதியில் வசித்து வரும் சேலம் மாவட்டம், நாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் கந்தசாமி (61). இவா், மனைவி பாரதி (59) மற்றும் பேரன் தீனதயாளன் (26) உடன் கேரளாவில் இருந்து சேலம் நோக்கி ஆட்டோவில் செவ்வாய்க்கிழமை வந்துகொண்டிருந்தாா். பெருமாநல்லூா், ஈட்டிவீரம்பாளையம் அருகே வந்தபோது, பின்னால் வந்த லாரி ஆட்டோ மீது மோதியது.
இதில், பாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், பலத்த காயமடைந்த கந்தசாமி, தீனதயாளன் ஆகியோா் சிகிச்சைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநா் ராஜேஷிடம் விசாரித்து வருகின்றனா்.