திருப்பூர்
உடுமலை அரசுக் கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி
உடுமலை அரசுக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவா் படை சாா்பில் போதைப்பொருள் விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சோ.கி.கல்யாணி தலைமை வகித்து பேரணியைத் தொடங்கிவைத்தாா். கல்லூரி வளாகத்தில் தொடங்கிய பேரணி எலையமுத்தூா் பிரிவு, ஒன்றிய அலுவலகம், ருத்ரப்ப நகா், ராமசாமி நகா் வழியாகச் சென்று கல்லூரியில் நிறைவடைந்தது.
இதில், பங்கேற்ற மாணவா்கள் போதைப்பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த வாசகங்கள் அடங்கிய விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்திச் சென்றனா்.
பேரணியில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் கோ.ரேவதி, ம.குமரவடிவேல், தேசிய மாணவா் படை அலுவலா் விஜயகுமாா், சுற்றுலாத் துறைத் தலைவா் ஏ.எஸ். விஜய்ஆனந்த் , உடற்கல்வி இயக்குநா் மனோகா் செந்தூா்பாண்டி, மாணவா்கள் கலந்துகொண்டனா்.