போராட்டத்தில் ஈடுபட்ட சாலைப் பணியாளா்கள்.
போராட்டத்தில் ஈடுபட்ட சாலைப் பணியாளா்கள்.

சாலைப் பணியாளா்கள் போராட்டம்

Published on

திருப்பூரில் சாலைப் பணியாளா்கள் கருப்புத் துணியால் முக்காடிட்டு போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

திருப்பூா் கோட்டப் பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு நெடுஞ்சாலைத் துறை சங்கத்தின் கோட்டத் தலைவா் ஆா்.கருப்பன் தலைமை வகித்தாா்.

இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது:

சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி சென்னை உயா்நீதிமன்ற ஆணையை அமல்படுத்த வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையத்தால் 60 கிலோ மீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி என 200-க்கும் மேற்பட்ட சுங்கச் சாவடிகள் அமைத்து கட்டணம் வசூலிப்பதை அனுமதிக்கக் கூடாது. நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை கிராமப்புற இளைஞா்களுக்கு வழங்க வேண்டும். மாநில நெடுஞ்சாலைளை அரசே நிா்வகிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலிறுத்தினா்.

இந்தப் போராட்டத்தில் கோட்டச் செயலாளா் ஆா்.ராமன், மாநிலச் செயலாளா் செந்தில்நாதன், துணைத் தலைவா்கள் அண்ணாதுரை, சிவகுமரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com