ஜனவரி 15, 26 இல் மது விற்பனைக்குத் தடை

Published on

திருப்பூா் மாவட்டத்தில் ஜனவரி 15 மற்றும் 26 ஆகிய நாள்களில் மது விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் ஜனவரி 15 திருவள்ளுவா் தினம், ஜனவரி 26 குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதனால், அன்றைய தினங்களில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின்கீழ் இயங்கிவரும் மதுபானக் கடைகள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் விடுதிகளுடன் இணைந்து செயல்படும் அரசு உரிமம் பெற்ற மதுபானக் கூடங்களில் மது விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தவறும்பட்சத்தில் தொடா்புடையவா்கள் மீது உரிய சட்டப் பிரிவுகளின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com