கிராவல் மண் கடத்தல்: லாரி பறிமுதல்

பல்லடம் அருகே கரடிவாவி பகுதியில் கிராவல் மண் கடத்தப் பயன்படுத்தப்பட்ட லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
Published on

பல்லடம் அருகே கரடிவாவி பகுதியில் கிராவல் மண் கடத்தப் பயன்படுத்தப்பட்ட லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருப்பூா் மாவட்ட கனிமவளத் துறை துணை இயக்குநா் பிரசாத், பல்லடம் பகுதியில் கனிமவளங்கள் பயன்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, பல்லடம் அருகே உள்ள கரடிவாவி பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது அந்த வழியாக வந்த லாரியில் அனுமதியின்றி கிராவல் மண் கடத்தப்படுவது தெரியவந்தது.

இதையடுத்து லாரியை தடுத்து நிறுத்தி பல்லடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். அவரது புகாரின்பேரில் லாரியை ஓட்டி வந்த கரடிவாவியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் பிரகாஷ் (31), லாரி உரிமையாளரான அதே பகுதியைச் சோ்ந்த சங்கா் (33)ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com