திருமூா்த்தி அணையில் இருந்து பாசனத்துக்கு இன்று தண்ணீா் திறப்பு

Published on

திருமூா்த்தி அணையில் இருந்து மூன்றாம் மண்டல பாசனத்துக்கு புதன்கிழமை (ஜனவரி 29) முதல் தண்ணீா் திறக்கப்படவுள்ளது.

இது குறித்து தமிழக நீா்வளத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டம், திருமூா்த்தி அணையில் இருந்து பிஏபி திட்டத்தில் பாலாறு படுகை மூன்றாம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு உள்பட்ட நிலங்களுக்கு 5 சுற்றுகள் வீதம் வரும் புதன்கிழமை முதல் ஜூன் 13- ஆம் தேதி வரை 135 நாள்களுக்கு உரிய இடைவெளிவிட்டு 10,300 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீா் திறந்துவிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதனால் கோவை மண்டலத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சூலூா் வட்டங்களில் உள்ள நிலங்கள் மற்றும் திருப்பூா் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம், பல்லடம், திருப்பூா், காங்கயம் தாராபுரம் வட்டங்களில் உள்ள நிலங்கள் என மொத்தம் 94,362 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com