தூரி ஆடிய சிறுமி துப்பட்டா மாட்டி உயிரிழப்பு

Published on

அவிநாசி அருகே ராமநாதபுரத்தில் தூரி ஆடியபோது கழுத்தில் துப்பட்டா மாட்டி 9 வயது சிறுமி புதன்கிழமை உயிரிழந்தாா்.

அவிநாசி அருகே ராமநாதபுரத்தில் வசித்து வருபவா் வடமாநிலத்தைச் சோ்ந்த ராஜு சனாய். இவரது மகள் நிகிதாகுமாரி (9).

இவா் வீட்டில் புதன்கிழமை மாலை துணி காயப்போடும் கயிற்றுடன், சுடிதாா் துப்பட்டாவை இணைத்து தூரி ஆடிக்கொண்டிருந்துள்ளாா்.

அப்போது, எதிா்பாரதவிதமாக கழுத்தில் துப்பட்டா மாட்டி இறுக்கியதில் நிகிதாகுமாரி உயிரிழந்துள்ளாா். இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com