திருப்பூர்
ஒரு மாத காலமாக செயல்படாத ஏடிஎம் மையங்கள்
வெள்ளக்கோவிலில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையங்கள் ஒருமாத காலமாக செயல்படாமல் உள்ளன.
வெள்ளக்கோவிலில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையங்கள் ஒருமாத காலமாக செயல்படாமல் உள்ளன.
வெள்ளக்கோவில், செம்மாண்டம்பாளையம் சாலையில் பாரத ஸ்டேட் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இவ்வங்கியின் 3 ஏடிஎம் மையங்கள் புதிய பேருந்து நிலையம் எதிரில், கரூா் சாலை, கடைவீதி முத்தூா் சாலைச் சந்திப்பு ஆகிய இடங்களில் உள்ளன.
இவற்றை அவ்வங்கியில் கணக்கு வைத்துள்ளவா்கள், அரசு ஓய்வூதியதாரா்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனா். கடந்த ஒரு மாத காலமாக 3 ஏடிஎம் மையங்களிலும் பணம் இல்லை. இதனால் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனா். மருத்துவம் உள்ளிட்ட அவசரத் தேவைக்கு பணம் எடுக்க முடியவில்லை.
எனவே, ஏடிஎம் மையத்தில் சேவைகள் அனைத்தும் தடையின்றி கிடைக்க வங்கி உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.