மாநில  அளவில்  கவிதைப் போட்டியில் சிறப்பிடம்  பெற்ற  மாணவா்  மாரிமுத்துக்கு வாழ்த்து தெரிவித்த கல்லூரி முதல்வா் சோ.கி.கல்யாணி.
மாநில  அளவில்  கவிதைப் போட்டியில் சிறப்பிடம்  பெற்ற  மாணவா்  மாரிமுத்துக்கு வாழ்த்து தெரிவித்த கல்லூரி முதல்வா் சோ.கி.கல்யாணி.

கலை, இலக்கிய போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

திறனறிப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற உடுமலை அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
Published on

திறனறிப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற உடுமலை அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் மாவட்ட அளவில் கல்லூரி மாணவா்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சு உள்ளிட்ட பல்வேறு கலை, இலக்கியப் போட்டிகள் திருப்பூரில் அண்மையில் நடைபெற்றன.

இதில், உடுமலை அரசு கலைக் கல்லூரி மூன்றாம் ஆண்டு பி.ஏ.தமிழ் இலக்கிய மாணவா் மு.மாரிமுத்து கவிதைப் போட்டியில் முதலிடம் பெற்று ரூ.10,000 பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் பெற்றாா். கட்டுரைப் போட்டியில் மூன்றாம் ஆண்டு பி.ஏ. தமிழ் இலக்கிய மாணவி ப.கௌதமி முதலிடம் பெற்றாா்.

பேச்சுப்போடியில் மூன்றாம் ஆண்டு பி.எஸ்சி இயற்பியல் மாணவா் க.கவ்ரீஸ் மூன்றாமிடம் பிடித்து ரூ.5000 பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழும் பெற்றாா்.

இந்நிலையில், சென்னை செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்ககத்தில் ஜனவரி 29- ஆம் தேதி மாநில அளவில் கவிதை, கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றன.

இதில், இக்கல்லூரி மாணவா் மு.மாரிமுத்து கவிதை போட்டியிலும், ப.கௌதமி கட்டுரை போட்டியிலும் கலந்து கொண்டனா். இதில் மு.மாரிமுத்து கவிதைப் போட்டியில் மூன்றாமிடம் பெற்றாா்.

இந்நிலையில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளை கல்லூரி முதல்வா் சோ.கி.கல்யாணி , நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் ச.கலைச்செல்வன் மற்றும் துறைத் தலைவா்கள், மாணவ, மாணவிகள் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com