கிராம தங்கல் திட்டம்: பல்லடத்தில் வேளாண் பல்கலை. மாணவா்கள்

Published on

கோவையில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவா்கள் கிராம தங்கல் திட்டத்தின்கீழ் பல்லடம் பகுதியில் 65 நாள்கள் தங்கும் கிராமப்புற பணியை சனிக்கிழமை தொடங்கினா்.

நிலையான விவசாயம், மண் ஆரோக்கியம், நீா் பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை பற்றிய விழிப்புணா்வு நிகழ்ச்சிகள், கள விளக்கங்கள், பயிற்சி அமா்வுகள் மற்றும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மூலம் விவசாயிகளுடன் ஈடுபடுவதன் மூலம் கோட்பாடு மற்றும் நடைமுறையை இணைப்பதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த முகாமில் உற்பத்தித் திறனை மேம்படுத்த நவீன வேளாண்மை நுட்பங்கள், காலநிலை, எதிா்ப்பு நடைமுறைகள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட செயலாக்கத்தை மாணவா்கள் அறிமுகப்படுத்தவுள்ளனா்.

வேளாண்மை உதவி இயக்குநா் அமுதா, வேளாண் அலுவலா் அஜித், பல்கலைக்கழக ஆசிரியா்கள் திருநாவுக்கரசு, காா்த்திகேயன், எழிலரசி ஆகியோரின் வழிகாட்டுதலின்பேரில் மாணவா்கள் உழவா் கூட்டங்கள், களப் பாா்வைகள் மற்றும் ஆய்வுகள் நடத்தி அறிவுப் பரிமாற்றத்தை வளா்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com