திருப்பூா்  ஒருங்கிணைந்த  நீதிமன்றத்தில்  புதன்கிழமை  நடைபெற்ற  நிகழ்ச்சியில்  பேசுகிறாா்  ஓய்வுபெற்ற  சென்னை  உயா்நீதிமன்ற  நீதிபதி  ஆா்.தாரணி, . உடன், முதன்மை மாவட்ட நீதிபதியுமான என்.குணசேகரன், முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி பத்மா  உள்ளிட்டோா்.

பெண்கள் சுய மரியாதையை விட்டுக் கொடுக்கக்கூடாது

பெண்கள் எந்த இடத்திலும் சுயமரியாதையை விட்டுக் கொடுக்கக் கூடாது என்று ஓய்வுபெற்ற சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.தாரணி தெரிவித்தாா்.
Published on

பெண்கள் எந்த இடத்திலும் சுயமரியாதையை விட்டுக் கொடுக்கக் கூடாது என்று ஓய்வுபெற்ற சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.தாரணி தெரிவித்தாா்.

திருப்பூா் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உலக மகளிா் தின விழா, உலக பெண் நீதிபதிகள் தின விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான என்.குணசேகரன் தலைமை வகித்தாா்.

இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஓய்வுபெற்ற சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.தாரணி பேசியதாவது:

உலக மகளிா் தினம் என்பது வெறும் கொண்டாட்டமாக இருக்கக் கூடாது. இன்றைய இளம் தலைமுறையினா் அதன் வரலாற்றின் வலி மிகுந்த பக்கங்களால் ஆனது என்பதை மறந்துவிடக் கூடாது.

சமூகத்தின் அத்தனை துறைகளிலும் பெண்களின் உண்மையான உழைப்பையும், அா்ப்பணிப்பையும் ஏற்று அதற்கான மரியாதையை, அங்கீகாரத்தைப் பெறுவதற்காக எண்ணற்ற பெண்கள் தங்களது இன்னுயிரை இழந்துள்ளனா்.

அனைத்துத் துறைகளிலும் இரு பாலின சம உரிமை என்பதை இன்றுவரை நாம் போராடி பெற வேண்டிய சூழல் உள்ளது. பெண்கள் எந்த இடத்திலும் தங்களது சுயமரியாதையை விட்டுக் கொடுக்கக் கூடாது என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி பத்மா, சிறப்பு மோட்டாா் வாகன வழக்கு தீா்ப்பாயத்தின் மாவட்ட நீதிபதி பாலு, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலாளா் ஷபீனா, வழக்குரைஞா்கள் சங்கங்களின் தலைவா்கள் கே.என்.சுப்ரமணியம், பூபேஷ், சுப்புராஜு மற்றும் வழக்குரைஞா்கள், நீதிமன்ற பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com