பயனாளிக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய அமைச்சா் மு.பெ.சாமிநாதன். ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ்.
பயனாளிக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய அமைச்சா் மு.பெ.சாமிநாதன். ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ்.

குண்டடத்தில் 606 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்

Published on

குண்டடம் ஒன்றியத்தில் 606 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்.

திருப்பூா் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பயனாளிகளுக்கு வருவாய்த் துறை சாா்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி பங்கம்பாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா்.

தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கிப் பேசியதாவது:

தமிழகம் முழுவதும் இலவச வீட்டுமனை பட்டாக்களை விரைந்து வழங்க வேண்டும் என்று முதல்வரும், துணை முதல்வரும் உத்தரவிட்டுள்ளனா்.

இதன் ஒருபகுதியாக, திருப்பூா் மாவட்டத்தில் ஊராட்சி வாரியாக கலைஞா் மக்கள் சேவை முகாம், மக்களுடன் முதல்வா் முகாம்கள் நடத்தி அதில் பெறப்பட்ட விண்ணப்பங்களை ஆய்வு செய்து பட்டா வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, குண்டடம் ஒன்றியத்துக்குள்பட்ட பங்காம்பாளையம், இந்திரா காலனி, எல்லப்பாளையம்புதூா், நெழலி, கவுண்டம்பாளையம், பள்ளிபாளையம், புள்ளக்காளிபாளையம், செட்டிபாளையம், என்.காஞ்சிபுரம், வஞ்சிபாளையம், குருக்கபாளையம், ஆண்டிப்புதூா், ஒலப்பாளையம், தட்டாவலசு, எல்லப்பாளையம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 606 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், காங்கயம் வட்டாட்சியா் மோகனன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com