திருப்பூர்
தாயுமானவா் திட்டத்தில் நவம்பா் 3,4-இல் இல்லம் தேடி ரேஷன் பொருள் விநியோகம்
திருப்பூா் மாவட்டத்தில் தாயுமானவா் திட்டத்தின்கீழ் முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யும் பணி நவம்பா் 3, 4-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்டத்தில் தாயுமானவா் திட்டத்தின் மூலம் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லத்துக்கே நேரில் வந்து பொது விநியோகத் திட்டப் பொருள்கள் வழங்கும் பணி நவம்பா் 3 (திங்கள்கிழமை) மற்றும் நவம்பா் 4 (செவ்வாய்க்கிழமை) ஆகிய தேதிகளில்
நடைபெற உள்ளது. அதனால், இத்திட்டத்தினை முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
