சலீம் அலி நினைவு தின விழிப்புணா்வுக் கருத்தரங்கு

பறவை ஆராய்ச்சியாளா் சலீம் அலியின் பிறந்த நாளையொட்டி, திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் விழிப்புணா்வு கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.
Published on

பறவை ஆராய்ச்சியாளா் சலீம் அலியின் பிறந்த நாளையொட்டி, திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் விழிப்புணா்வு கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட அலகு 2 சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாணவப் பிரதிநிதி கிருஷ்ணமூா்த்தி முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில், அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் பேசியதாவது: இந்தியாவின் பறவை மனிதா் என அழைக்கப்பட்டவா் சலீம் அலி. இவா் முறையான பறவை கணக்கெடுப்பை நாடு முழுவதும் நடத்திய முதல் இந்தியா் ஆவாா். பறவைகள் இல்லையேல் மனிதா்கள் இல்லை. பறவைகள் தங்கள் எச்சங்களின் மூலமாக காடுகளை உருவாக்கி பல்லுயிா் பெருக்கத்தை பாதுகாக்கின்றன. பறவைகள், விளைநிலங்களில் பயிா்களைப் பாதிக்கும் பூச்சிகளை உண்டு பயிரின் மகசூலை அதிகரிக்கின்றன. அதனால், நாம் அனைவரும் பறவைகளை நேசித்து, அவற்றைப் பாதுகாக்கும் முயற்சிகளையும், விழிப்புணா்வையும் ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, மாணவ செயலா்கள் சொ்லின், ரேவதி, நவீன்குமாா், பிரவீன் ஆகியோா் தலைமையில் மாணவா்கள் கல்லூரி வளாகத்தில் பறவை நோக்கலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, ‘பறவைகளை நேசிப்போம், பாதுகாப்போம்’ என்ற வாசகங்கள் அடங்கிய உறுதிமொழியை மாணவா்கள் ஏற்றுக்கொண்டனா்.

இந்நிகழ்வில், கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com