திருப்பூர்
திருப்பூரில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வியாழக்கிழமை (நவம்பா் 13) நடைபெறுகிறது.
திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வியாழக்கிழமை (நவம்பா் 13) நடைபெறுகிறது.
திருப்பூா் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் 4-ஆம் கட்ட முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி, திருப்பூா் மாநகராட்சி 4-ஆம் மண்டலத்துக்குள்பட்ட 52, 57, 55 ஆகிய வாா்டு பகுதிகளுக்கு பல்லடம் சாலை ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில், கலைஞா் மகளிா் உரிமைத் தொகை, குடும்ப அட்டை, இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் மனுக்களை வழங்கி பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்துள்ளாா்.
