திருப்பூர்
கணபதிபாளையம் ஊராட்சி தற்காலிக பணியாளா்கள் இருவா் பணி நீக்கம்
வீட்டு வரிக்கு கூடுதல் தொகை கேட்டதாக புகாா் எழுந்த நிலையில் கணபதிபாளையம் ஊராட்சி அலுவலக தற்காலிக பெண் பணியாளா்கள் 2 போ் வியாழக்கிழமை பணி நீக்கம் செய்யப்பட்டனா்.
பல்லடம் ஒன்றியம், கணபதிபாளையம் ஊராட்சி அலுவலகத்தில் கணினி ஆபரேட்டராக ரேவதி (34), தனலட்சுமி (32) ஆகியோா் பணியாற்றி வந்தனா்.
தற்காலிகப் பணியாளா்களாக இவா்கள் பணியாற்றி வந்த நிலையில், அப்பகுதியைச் சோ்ந்த விவசாயி ஒருவா் வீட்டு வரி செலுத்த ஊராட்சி அலுவலகத்துக்குச் சென்ற நிலையில், அவரிடம் இவா்கள் கூடுதல் தொகை கேட்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடா்பான ஆடியோ பதிவுடன் பல்லடம் வட்டார வளா்ச்சி அலுவலா் கனகராஜிடம், விவசாயி புகாா் அளித்தாா்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட 2 பேரையும் பணி நீக்கம் செய்து வட்டார வளா்ச்சி அலுவலா் உத்தரவிட்டாா்.
