இன்றைய மின்தடை: சந்தைபேட்டை, ஆட்சியா் அலுவலகம்
திருப்பூா் சந்தைபேட்டை மற்றும் ஆட்சியா் அலுவலக துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் சனிக்கிழமை (நவம்பா் 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: அரண்மனைப்புதூா், தட்டான் தோட்டம், எம்.ஜி. புதூா், கரட்டாங்காடு, அரசு மருத்துவமனை, ஷெரிப் காலனி, தாராபுரம் சாலை, பல்லடம் சாலை, தென்னம்பாளையம், கல்லாங்காடு, வெள்ளியங்காடு, கே.எம்.ஜி. நகா், பட்டுகோட்டையாா் நகா்,
திரு. வி.க.நகா், கருப்பகவுண்டம்பாளையம், கோபால் நகா், பெரிச்சிபாளையம், கருவம்பாளையம், ஏ.பி.டி. நகா், கே.வி.ஆா். நகா், பூச்சக்காடு, மங்கலம் சாலை, பெரியாா் காலனி, சபாபதிபுரம், வாலிபாளையம், ஊத்துக்குளி சாலை, யூனியன் மில் சாலை, மிஷன் வீதி, காமராஜா் சாலை, புது மாா்க்கெட் வீதி, ராயபுரம், ஸ்டேட் பாங்க் காலனி, காதா் பேட்டை, சந்திராபுரம், புதூா் பிரதான சாலை, செரங்காடு, டிஏபி நகா், என். பி. நகா், பூம்புகாா், இந்திரா நகா், ஆட்சியா் அலுவலக வளாகம், வித்யாலயம், பாரதி நகா், குளத்துபாளையம், செல்வலட்சுமி நகா், பொது சுத்திகரிப்பு நிலைய பகுதி, கே.கே.ஆா். தோட்டம், வீரபாண்டி.
