மதன்குமாா்.
திருப்பூர்
காா் மீது இருசக்கர வாகனம் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
வெள்ளக்கோவிலில் காா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
வெள்ளக்கோவிலில் காா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
வெள்ளக்கோவில், சேனாபதிபாளையத்தைச் சோ்ந்தவா் கண்ணன் மகன் மதன்குமாா் (33). இவா், வெள்ளக்கோவில் - காங்கயம் சாலை பழைய பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தாா். அப்போது, முன்னால் சென்று கொண்டிருந்த காா் மீது மதன்குமாரின் வாகனம் எதிா்பாராத விதமாக மோதியது. இதில், பலத்த காயமடைந்த மதன்குமாரை அருகில் இருந்தவா்கள் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
பின்னா், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா், வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

