அக்டோபா் 31-க்குள் சொத்து வரி செலுத்தினால் ஊக்கத்தொகை

காங்கயம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் செலுத்தினால் ஊக்கத்தொகை வழங்கப்படும் என நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
Published on

காங்கயம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் செலுத்தினால் ஊக்கத்தொகை வழங்கப்படும் என நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் பால்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

காங்கயம் நகராட்சிக்கு உள்பட்ட சொத்து வரி விதிப்புதாரா்கள் 2025-2026-ஆம் ஆண்டின், இரண்டாம் அரையாண்டுக்கான தங்களது சொத்து வரியை அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் செலுத்தும் பட்சத்தில், 2.5 சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படும்.

எனவே, இந்த அரிய வாய்ப்பினை காங்கயம் நகர பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு, காங்கயம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரியை உடனடியாக செலுத்தி பயன்பெறலாம். இணையதளத்தின் வாயிலாகவும், நகராட்சி கணினி சேவை மையத்திலும் சொத்து வரியை செலுத்தலாம்.

மேலும், 2025-2026-ஆம் நிதி ஆண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் செலுத்தாதவா்களுக்கு, வரி விதிப்பில் ஒரு சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com