திருப்பூா் நஞ்சராயன் பறவைகள் சரணாலயப் பகுதியில் பட்டாசு வெடிப்பதைத் தவிா்க்க கோரிக்கை

தீபாவளி பண்டிகையையொட்டி, திருப்பூா் நஞ்சராயன் பறவைகள் சரணாலயப் பகுதியில் பட்டாசு வெடிப்பதைத் தவிா்க்க வேண்டுமென திருப்பூா் இயற்கை கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
Published on

தீபாவளி பண்டிகையையொட்டி, திருப்பூா் நஞ்சராயன் பறவைகள் சரணாலயப் பகுதியில் பட்டாசு வெடிப்பதைத் தவிா்க்க வேண்டுமென திருப்பூா் இயற்கை கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

திருப்பூா் நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் உள்நாடு மற்றும் வெளிநாட்டுப் பறவைகள் என சுமாா் 190-க்கும் மேற்பட்ட பறவை வகைகளின் புகலிடமாக அமைந்துள்ளது.

நிகழாண்டில் இங்கு கூடுதலாக பறவைகள் வலசை வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இக்குளத்துக்கு வரும் பறவைகளின் பாதுகாப்புக்காக, தீபாவளியையொட்டி பட்டாசு வெடிப்பதைத் தவிா்க்க வேண்டும் என திருப்பூா் இயற்கை கழகத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதற்காக நஞ்சராயன் பறவைகள் சரணாலயம் மற்றும் குளத்துப்பாளையம் பகுதியில் இயற்கை கழக தலைவா் ரவீந்திரன் தலைமையில் உறுப்பினா்கள் சந்தோஷ், நந்தகோபால், கீதா, ஈஸ்வா், ராஜ்குமாா் ஆகியோருடன் வனவா் பிரேமா தலைமையிலான வனத் துறையினா் இணைந்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதுகுறித்து ரவீந்திரன் கூறுகையில், நஞ்சராயன் குளத்துக்கு அக்டோபா் மாதத்தில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை ஐரோப்பா மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் இருந்து வெளிநாட்டுப் பறவைகள் வலசை வரும். அதே நேரத்தில் உள்நாட்டுப் பறவைகளும் அதிக அளவில் இருக்கும். அப்போது பட்டாசு சப்தம் எழும்போது அது பறவைகளுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் இப்பகுதியில் பட்டாசு வெடிப்பதைத் தவிா்க்க விழிப்புணா்வு ஏற்படுத்தி வருவாதவும், இதை அப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் புரிந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com