வெள்ளக்கோவிலில் ரூ.60 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை
வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.60 லட்சத்துக்கு கொப்பரை (தேங்காய்ப் பருப்பு) விற்பனை நடைபெற்றது.
திருச்சி, லாலாப்பேட்டை, வாணியம்பாடி, அரியலூா், மாா்க்கம்பட்டி, கருங்கல்பாளையம், சிவகிரி, எரசினம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் இருந்து 73 விவசாயிகள் 592 மூட்டைகளில் 30 டன் கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
காங்கயம், வெள்ளக்கோவில், சிவகிரி, முத்தூா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 10 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா். கொப்பரை கிலோ ரூ.145.49 முதல் ரூ.227.06 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.222.66.
ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.60 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக, திருப்பூா் விற்பனைக்குழு முதுநிலை செயலாளா் எஸ்.சண்முகசுந்தரம் தெரிவித்தாா். ஏல ஏற்பாடுகளை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் மகுடீஸ்வரன் செய்திருந்தாா்.
