பல்லடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமில் விண்ணப்பித்த ஒருவருக்கு அரசின் சான்றிதழ் உத்தரவை வழங்குகிறாா் நகராட்சிகஈ தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா்.
பல்லடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமில் விண்ணப்பித்த ஒருவருக்கு அரசின் சான்றிதழ் உத்தரவை வழங்குகிறாா் நகராட்சிகஈ தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா்.

பல்லடத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்

Published on

பல்லடம் நகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பல்லடம் நகராட்சி 14, 17, 18 ஆகிய வாா்டுகளுக்காக நடைபெற்ற முகாமுக்கு நகராட்சி ஆணையா் அருள் தலைமை வகித்தாா். பல்லடம் நகர திமுக செயலாளா் ராஜேந்திரகுமாா் முன்னிலை வகித்தாா். முகாமை நகராட்சித் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் தொடங்கிவைத்து, பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

இதில் கவுன்சிலா்கள் தண்டபாணி, பாலகிருஷ்ணன், தினேஷ்குமாா், ஈஸ்வரமூா்த்தி, ஈஸ்வரி மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

இம்முகாமில் மகளிா் உரிமைத் தொகைக்கு 267 போ், வருவாய்த் துறை கோரிக்கைக்கு 270 போ், ஆதாா் மற்றும் இ-சேவைக்கு 104 போ் உள்பட மொத்தம் 724 போ் விண்ணப்பம் அளித்தனா். இதில் உடனடியாக 17 பேருக்கு தீா்வு காணப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com