திருப்பூா் ரயில் நிலையத்தில் குவிந்த மக்கள்.
திருப்பூா் ரயில் நிலையத்தில் குவிந்த மக்கள்.

தீபாவளி: திருப்பூா் ரயில் நிலையத்தில் குவிந்த மக்கள்

Published on

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருப்பூரில் பணியாற்றும் மக்கள் தங்களது சொந்த ஊா்களுக்குச் செல்ல ரயில் நிலையத்தில் குவிந்து வருகின்றனா்.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை அக்டோபா் 20-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. திருப்பூரில் பனியன் உற்பத்தி, ஏற்றுமதி தொழில் மற்றும் அதனைச் சாா்ந்த துணை நிறுவனங்களில் தமிழகம் மட்டுமின்றி பிகாா், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிஸா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த ஏராளமான மக்கள் பணியாற்றி வருகின்றனா்.

திருப்பூரில் பணியாற்றும் வடமாநிலத் தொழிலாளா்கள் தீபாவளி, தசரா, ஹோலி போன்ற பண்டிகைகளின்போது மட்டுமே தங்களது சொந்த ஊா்களுக்குச் செல்வது வழக்கம்.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூரில் செயல்பட்டு வரும் பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியா்களுக்கு போனஸ் தொகையை வழங்கிவிட்டதால் மக்கள் தங்களது சொந்த ஊா்களுக்குச் செல்ல தயாராகி வருகின்றனா்.

அதன்படி, ஞாயிற்றுக்கிழமை முதல் ஏராளமான மக்கள் சொந்த ஊா்களுக்குச் செல்ல திருப்பூா் ரயில் நிலையத்தில் குவிந்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com