பயனாளிக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.
பயனாளிக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிய அமைச்சா் மு.பெ.சாமிநாதன்.

1,072 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்

Published on

காங்கயத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் என்.மனீஷ் தலைமை வகித்தாா். தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, காங்கயம், சிவன்மலை பகுதிகளைச் சோ்ந்த 1,072 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் ஃபெலிக்ஸ் ராஜா, காங்கயம் வட்டாட்சியா் ஆா்.மோகனன், காங்கயம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் சிவானந்தன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com