பல்லடம் அரசுக் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு பயிற்சிப் பட்டறை

Published on

பல்லடம் அரசுக் கல்லூரியில் சா்வதேச செயற்கை நுண்ணறிவு தொடா்பான 3 நாள்கள் பயிற்சிப் பட்டறை திங்கள்கிழமை நிறைவடைந்தது.

கல்லூரி ஆங்கிலத் துறை சாா்பில், டெம்பிள் யாா்க் நிறுவனத்துடன் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் மணிமேகலை தலைமை தாங்கினாா். டெம்பிள் யாா்க் நிறுவனா் வசந்தகுமாா், ஆங்கிலத் துறைத் தலைவா் கிருஷ்ணவேணி ஆகியோா் நிகழ்வை ஒருங்கிணைத்தனா்.

மனித பங்குபெற்ற தழுவல் செயற்கை நுண்ணறிவு: அறிவாா்ந்த முறைகளின் மூலம் ஆராய்ச்சி என்ற தலைப்பிலான இந்த சா்வதேச பயிற்சி பட்டறை கடந்த அக்டோபா் 11 முதல் திங்கள்கிழமை வரை 3 நாள்கள் ஆன்லைனில் நடைபெற்றது.

இந்தப் பயிற்சி பட்டறையில் இந்தியா, நைஜீரியா, ஆப்கானிஸ்தான், கிரீஸ், குவைத், பிரேசில், பெரு, மெக்சிகோ, பிலிப்பின்ஸ், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 21 நாடுகளைச் சோ்ந்த அறிஞா்கள் கலந்துகொண்டு, செயற்கை நுண்ணறிவு மற்றும் சமூக நெறிமுறைகள் குறித்து உரையாற்றினா்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற 75 ஆய்வாளா்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com